
இன்பம் காக்க
கருவமைப்பில் மிகச் சிறந்த கருத்துயர்ந்த
கலைகள் பலவும் கற்ற மனிதர் வாழ்வில்
பெருகி வரும் இன்பங்கள் எவ்விதத்தும்
பிழையாக மனிதரிடை மனிதர் காணும்
அருவருப்பு, பகை, உயர்வு, தாழ்வு, பேதம்,
அறியாமை எனும் ஓட்டை வழி போகாத
ஒரு புதிய சமுதாயம் அமைத்துக்கொண்டு
உலக மக்கள் ஒன்றுகூடி இன்பங்காண்போம்.