
தேவையுணர்வும் அறியாமையும்
அறிவினது வளர்ச்சியிலா மக்களுக்கு
அவசியத் தேவைப்பொருட்கள் கிடைக்காவிட்டால்
நெறி தவறி செயல் விளைக்கும் துணிவு உண்டாம்;
நில உலகில் இந்த நிலை மீற மீற
வெறிகொண்டு மனிதர் பலர் ஆற்றும் செய்கை
விதம் பலவாய் துன்பத்தை அதிகரிக்கும்;
வறியோர் கல்லார் என்றே இல்லாவாறு
வாழ்வதற்குத் திட்டமிட்டு நலனைக் காண்போம்.