
இருள் போக்கும் யோகம்
அருள் விளக்க மில்லாத குறையில் மக்கள்
அனைத்து நலனும் இழந்து துன்பம் ஏற்று
பொருள் காக்க, பூகாக்க, பொன்னைக்காக்கப்
போரிட்டு மடிகின்றார் அந்தோ! வாழ்வில்
மருள் போக்கி மக்கள் ஒத்துதவி வாழ
மனத்தூய்மை வினைத்தூய்மை பெற்றுள்ளத்தில்
இருள் போக்கும் அகத்தவமும் அகத்தாய்வும் பின்
இனிதளிக்கும் குண்டலினி யோகம் கற்பீர்.